தமிழ் அன்னையை வணங்கும் தருணம் .... ஜெயம் உண்டாகட்டும்
தமிழர் திருநாள் வந்தது இன்று
தமிழ் நெஞ்சங்கள் வாழ்த்துது வந்து
தாயும் சேயும் வாழ்க வென்று
தாயகம் காப்போம் வளமுடன் நன்று !!
வேத வாக்கு அல்ல என் வாக்கு - இருந்தாலும்
வெற்றி வாக்கு ஆம் என் வாக்கு - எந்நாளும்
வெந்த வாக்கு அல்ல என் வாக்கு - இருந்தாலும்
வெற்றி வாக்கு ஆம் என் வாக்கு - எந்நாளும் !!
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் - வருக வருக
மன்னர்கள் மந்திரிகளை தேர்வு செய்யும் காலம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் - வருக வருக
மந்திரியின் மன்னரை மனம் நிறுத்தும் காலம் !!
அமை(மே )தியின் நாயகனோ அவன் - காலம் செய்யும் கோலம்
வால் போனது கத்தி(ஜ்ரி )யும் போனதோ - ஆம் ஆத்மா பயம் போக்கும்
மோதியும் நாயகனா அவன் - காலம் செய்யும் கோலம்
நிதியின் கருணையால் வந்து - லலிதாவை ஜெயம் போக்கும் !! :-)
புதிய தென்றல் - புரியா புதிர் - இந்நாளும் இனிய நாளோ
பல கோடி - புது வாக்கர் - மதியால் விதியை வெல்வர்?
மன்னர்கள் வாழும் மகேசன் நாட்டை நிலை நிறுத்துவர்
பல கோடி - முது வாக்கர் - விதியை மோ(ம)தியால் வெல்வர் ?
நல்ல காலம் பிறக்குது - நல்ல நேரம் மிதக்குது
நல ஆட்சி பெருக்குது - நல் கட்சி நிலைக்குது
புத்தாண்டு வாக்கும் வாக்குறுதி அல்ல - பலிக்குது
புத்தாண்டு வாக்கும் தெருக்கூத்து அல்ல - சிறக்குது !!
தமிழர் திருநாள் வந்தது இன்று
தமிழ் நெஞ்சங்கள் வாழ்த்துது வந்து
தாயும் சேயும் வாழ்க வென்று
தாயகம் காப்போம் வளமுடன் நன்று !!
புத்தாண்டின், சிறப்பு மிகு வாக்கின், ப்ரதிபலிப்பு - நல் நெஞ்சங்கள் கூறும்
நிஜங்கள் ..
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி) - ஏப்ரல்14 2014 - சித்திரை 1, 2014
பி.கு. இம்முறையும், இந்த சொந்த சரக்கை, பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்..