இந்திய கனவு - தமிழனின் கண்ணோட்டம்
பொங்கல் நாள் வாழ்த்துக்கள் - வணக்கம்
ஆங்கில நாள் வந்தது - வென்றோம்
பொங்கல் நாள் நல்லெண்ணங்கள் - வரவேற்பு
ஆங்கில நாள் சென்றது - பாராட்டு !!
சற்றே உறங்கினேன் வரவேற்பறையில் ஒர் நாள்
ஆஹா என்ன அனுபவம் - பல வண்ணம்
சான்று - கனவின் எதிரொலி - ஆம் - விவரம் கேளீர்
ஒரு இந்திய கனவு - தமிழனின் தூக்கம் நடுவே !!
சுத்தம் சோறு போடும் - இல்லை - வீதியில் குப்பை
சத்தம் சொத்து போதும் - இல்லை - மனதில் குப்பை
என் வீதி சிங்கையின் எதிரொலி - ஆம் - 2020 கனவு
என் சாதி சலங்கையின் எதிரொலி - ஆம் - 2016 கனவு !!
நதிகள் வீதியில் ஓடா - இல்லை - வீதியில் குப்பை
நாடிகள் பீதியில் ஓடா - இல்லை - மனதில் குப்பை
என் வீதி சிங்கையின் எதிரொலி - ஆம் - 2020 கனவு
என் சாதி சலங்கையின் எதிரொலி - ஆம் - 2016 கனவு !!
உலுக்கி எடுக்கும் வணிகம் - இல்லை - வீதியில் குப்பை
உருக்கி எடுக்கும் வாலிபம் (சுகம்) - இல்லை - மனதில் குப்பை
என் வீதி சிங்கையின் எதிரொலி - ஆம் - 2020 கனவு
என் சாதி சலங்கையின் எதிரொலி - ஆம் - 2016 கனவு !!
எல்லோரும் இந்நாட்டு மாமன்னர்கள் -வேண்டினோம் - நம்பிக்கையை
எல்லாரும் பன்னாட்டு மாமனிதர்கள் - வேண்டினோம் - தும்பிக்கையை
என் வீதி சிங்கையின் எதிரொலி - வென்றோம் - கனவல்ல நிஜம் (2020)
என் சாதி சலங்கையின் எதிரொலி - வென்றோம் - கனவல்ல நிஜம்!! (2016)
கனவின் சுகத்துடன் - பொங்கல் நல் வாழ்த்துக்கள்
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி)
14 ஜனவரி 2016
பி. கு : இந்த சொந்த சரக்கு - எங்கள் இதய அன்பளிப்பு - இதய துடிப்புடன் ஏற்று இன்பம் பெருக!!