visits - with gratitudes

Thursday, April 13, 2017

நலம் நலமறிய ஆவல் - அன்புடன் நண்பன் - ஹேவிளம்பி வாழ்த்துக்கள் - Apr 2017

நலம் நலமறிய ஆவல் - அன்புடன் நண்பன் 


நலம் நலமறிய ஆவல்
நீ அங்கு சுகமா?
நான் இங்கு சுகமே !
நலம் நலமறிய ஆவல் !!

தபால் அட்டையின் ஞாபகம் 
வந்ததே இன்றே என்பேன்
அந்த நாள் ஞாபகம் 
நலம் நலமறிய ஆவல் !!

மின் அஞ்சல் இன்றே இருந்தாலும் 
நொடியினில் செய்திகள் பறந்தாலும் 
அந்த நாள் போல் உண்டோ 
நலம் நலமறிய ஆவல் !!

வாழ்த்து மடல் வந்து சேர பல நாள் 
"அய்யா தந்தி" நடுங்கும் அந்த நாள்
வாழ்த்து எண் பதினாறு** மறப்பேனோ 
நலம் நலமறிய ஆவல் !!

தமிழ் திருநாள் வந்து வாழ்த்துது 
தமிழனின் ஞாபக தோட்டத்தை தோண்டுது 
நண்பனை நெஞ்சார போற்றுவேன் இன்றே 
நலம் நலமறிய ஆவல் !!

வாழ்த்து மடல் அளிக்கும் நலம் விரும்பிகள் 
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி) 

பி.கு: தமிழ் திரைப்பாடல் வரிகளில் இக்கவிதை தொடங்கியது போல் தோன்றினாலும்,  உண்மையில் இதன்  மூலாதாரம் நம் தாத்தா பாட்டி எழுதிய தபால் அட்டையில் கண்டெடுத்த முதல் வரிகளே!! 

** Phonogram - greeting number 16 - Wish you many happy returns of the day