பொங்கிடுவோம் - மகிழ்ந்துடுவோம் - வாழ்ந்திடுவோம்
பொங்கல் நாள் வந்த நேரம் - வந்தேன் நானும் உன்னை தேடி
நல்ல செய்தி வந்த நேரம் - வந்தேன் நானும் ஓடி ஓடி
முன் முன்னே தருவேன் கோடி வாழ்த்துக்கள் உன்னை பாடி
பொங்கல் நாள் நல்வரவு என்பேன் ஆசிகள் கோரி ஆடி ஆடி !!
புதிய வருடம் வந்த நேரம் - மனதில் அமைதி நிலவ வேண்டி
புதிய எண்ணங்கள் - புதிய வாழ்த்துக்கள் - மனதோ ஏங்குது
உலக அமைதியின் பிரதிபலிப்பு - மனம் வணங்குது வாழ்த்துது
புதிய வருடம் வந்த நேரம் - மனதில் அமைதி நிலவ வேண்டி !!
ஆரோக்கிய வாழ்வின் அன்பே - நிலைத்திடும் ஆனந்தம் கோடி
ஆனந்த வாழ்வின் அன்பே - நிலைத்திடும் அமைதியும் நாடி
இறை அருள் கோடி உன்னை தேடி - ஆனந்த ஆரோக்கியம் பாடி
புதிய வருடம் வந்த நேரம் - மனதில் அமைதி நிலவ வேண்டி !!
தை தை என்று மனம் பாடுது - மார்கழி மாத உணர்வின் தொடரோ
இறை அருள் பெற்ற நேரம் - கீதமும் நாதமும் சேர்ந்தே உலாவுதோ
தை பிறந்தால் வழி பெறவே - குணமான மனமே வந்தருள் இங்கே
புதிய வருடம் வந்த நேரம் - மனதில் அமைதி நிலவ வேண்டி !!
அன்பை பரிமாறுவோம் - ஆணவத்தை ஆண்டியாக்குவோம்
இன்பத்தில்
நனைத்து - ஈன்றவளை படித்திடுவோம்
உலக அமைதி எண்ணம் பூண்டு - ஏணிப்படிகள் ஏறிடுவோம்
பொங்கல் பானை
பொங்கிடுவோம்
- மகிழ்ந்துடுவோம்
– வாழ்ந்திடுவோம்
வாழ்த்துக்கள்
சாத்விக் - நளினி - கணேசன்
14 ஜன் 2020