visits - with gratitudes

Saturday, April 13, 2013

விஜயம் உண்டாகட்டும் - வாழ்த்துக்கள்


          விஜயம் உண்டாகட்டும் - வாழ்த்துக்கள்             


கிறுக்கல் உதையம் - மனதில் முளைக்கும் மார்க்கம் 
கிறுக்கல் உதையம் -  மண்ணில் மாறும் மன்றம் 
கிறுக்கல் உதையம் -  மனிதன் மனிதனை மதிக்கும் 
கிறுக்கல் உதையம் -  மனதில் மிதக்கும் முல்லை ..!!

கிறுக்கல் ஒன்று  -  புத்தாண்டு வாழ்த்துக்கள் வழங்குவேன் 
கிறுக்கல் ஒன்று -   புத்துணர்ச்சி வழங்க வேண்டுவேன் 
கிறுக்கல் ஒன்று -   பெருமகிழ்ச்சி வேண்டிய விஜயன் 
கிறுக்கல் ஒன்று -   புத்தாண்டு விஜயனை வரவேற்பேன்!!

 இரண்டாம் கிறுக்கல் -  முயற்சிகளை இன்றே ஊக்குவோம் 
இரண்டாம் கிறுக்கல் -   முகவரியை இன்றே தொலைப்போம் 
இரண்டாம் கிறுக்கல் -   முன்னுரையின்றி செயல் படுவோம் 
இரண்டாம் கிறுக்கல் -   முதல்வனாய் என்றும்  பயன் படுவோம்!!

கிறுக்கல் மூன்று -  அன்பினால் என்றுமே விளையாடுவோம் 
கிறுக்கல் மூன்று -  பண்பினால் விளையாடி விதைப்போம் 
கிறுக்கல் மூன்று -   ஆன்மீக விதையால் விடை காண்போம் 
கிறுக்கல் மூன்று -   விடைகளை விதிகளாக்கி  விடு படுவோம் !!

கிறுக்கனின் உச்சம் - உண்மையை பொய்மை ஆக்கி  விரைந்திடுவோம் 
கிறுக்கனின் உச்சம் - பகல் கனவில் பாலைவனம் அமைப்போம் 
கிறுக்கனின் உச்சம் - பகடை காய்களை பண்ட பரிமாற்றம் செய்வோம் 
கிறுக்கனின் உச்சம் -  பேசுவோர் பேசு முன் பாடல் அமைப்போம் !!

கிறுக்கலின்  உள்ளம்  - விஜயன் வருகிறான் - வழங்குவான் முதன்மை 
கிறுக்கலின்  உள்ளம்  - விஜயன் வருகிறான் - வழங்குவான் மேன்மை  
கிறுக்கலின்  உள்ளம்  - விஜயன் வருகிறான் - வழங்குவான் இனிமை 
கிறுக்கலின்  உள்ளம்  - விஜயன் வருகிறான் - வழங்குவான் முழுமை !!

முழுமையுடன் வாழ - வேண்டுகிறோம் - விஜயம் உண்டாகட்டும் 
சாத்விக் - நளினி - கணேசன்

No comments:

Post a Comment

value your views