visits - with gratitudes

Wednesday, December 31, 2014

Pk ..Pea(ie)(a)ce Keeper - New year wishes 2015 .. Pk

Pk ..Pea(ie)(a)ce Keeper - New year wishes 2015 .. Pk

Please know....                                          Here is my wish to you, customary 
                                                                                     Prayer to you, cyclically
                                                                                              A great year ahead
                                                                       Ecstatic, Enjoyable and Exciting

Please keep.....                                          Here is my wish to you, customary 
                                                                                     Prayer to you, cyclically
                                                                                Our connections reinforced
                                                             Enchanting, Enigmatic and Energizing

Please kindle ..                                         Here is my wish to you, customary 
                                                                                     Prayer to you, cyclically
                                                                                     The inner zeal and steel 
                                                                Ensuring, Enduring and Empowering 

Please kickoff ..                                        Here is my wish to you, customary 
                                                                                      Prayer to you, cyclically
                                                                                     Fun and celebration ever 
                                                                    Echoing, Excelling and Enthralling


Inspired by pk..the bollywood title..
 p.s: "you-line1" and "you-line2" convey different connotations at different paces..

Heartful New Year wishes from
Sathvik - Nalini - Ganesan
31 Dec 2014

Wednesday, October 22, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள் - மனம் போல் மாங்கல்யம் கிட்டட்டும் - 22 Oct 2014



தீபாவளி நல்வாழ்த்துக்கள் - மனம்  போல்  மாங்கல்யம்  கிட்டட்டும் - 2014
கவலைப்படாதே  சகோதரா

கவலைப்படாதே  சகோதரா
தீபாவளியும் வந்தாச்சு - கதிரொளியும் பிறந்தாச்சு
கவலைப்படாதே  சகோதரா

கவலைப்படாதே  சகோதரா
வாழ்த்து வழி பெருத்தாச்சு - வெளுத்து வாங்கு வெடி வெடிச்சு
கவலைப்படாதே  சகோதரா

கவலைப்படாதே  சகோதரா
நோபல் பரிசும் கிடைச்சாச்சு -  சத்யார்த்திக்கும்  ஓ போட்டாச்சு
கவலைப்படாதே  சகோதரா

கவலைப்படாதே  சகோதரா
மோதியும் மாடிமேல் வந்தாச்சு - மோதி பார்க்கலாம் இனிமேல் விட்டாச்சு
கவலைப்படாதே  சகோதரா

கவலைப்படாதே  சகோதரா
புல்லெட் ட்ரயினும் வரப்போருது - ஜப்பானில் கல்யாணராமன் கலக்கிட்டாரு
கவலைப்படாதே  சகோதரா

கவலைப்படாதே  சகோதரா
எதிர்காலம் எண்ணில் அடங்கா காலம் - எங்கேயும் எந்நாளும் (அட) அமர்க்களம்
கவலைப்படாதே  சகோதரா

கவலைப்படாதே  சகோதரா
மனம் போல் மாங்கல்யம் - மானம் பேர் மங்கல்யான் (Mangalayaan)
கவலைப்படாதே  சகோதரா

கவலைப்படாதே  சகோதரா
அடுக்கி கொண்டே போகலாம் - அட எல்லாமே நம் கையில் தான்
கவலைப்படாதே  சகோதரா

கவலைப்படாதே  சகோதரா
பொங்கி எழு இன்றே பொற் காலம் - அட போர்காலமல்ல
கவலைப்படாதே  சகோதரா

தீபாவளி நல்வாழ்த்துக்கள் - மனம் போல் மாங்கல்யம் கிட்டட்டும்
அன்பு இதயங்கள் - சாத்விக் - நளினி - கணேசன்

Sunday, April 13, 2014

தமிழ் அன்னையை வணங்கும் தருணம் .... ஜெயம் உண்டாகட்டும் - ஏப்ரல்14 2014 - சித்திரை 1, 2014





தமிழ் அன்னையை வணங்கும் தருணம் .... ஜெயம் உண்டாகட்டும்


தமிழர் திருநாள் வந்தது இன்று
தமிழ் நெஞ்சங்கள் வாழ்த்துது வந்து
தாயும் சேயும் வாழ்க வென்று
தாயகம் காப்போம் வளமுடன் நன்று !!

வேத வாக்கு அல்ல என் வாக்கு - இருந்தாலும்
வெற்றி வாக்கு ஆம் என் வாக்கு - எந்நாளும்
வெந்த வாக்கு அல்ல என் வாக்கு - இருந்தாலும்
வெற்றி வாக்கு ஆம் என் வாக்கு - எந்நாளும் !!

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் - வருக வருக
மன்னர்கள் மந்திரிகளை தேர்வு செய்யும் காலம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் - வருக வருக
மந்திரியின் மன்னரை மனம் நிறுத்தும் காலம் !!

அமை(மே )தியின் நாயகனோ அவன் - காலம் செய்யும் கோலம்
வால் போனது கத்தி(ஜ்ரி  )யும் போனதோ - ஆம் ஆத்மா பயம் போக்கும்
மோதியும் நாயகனா அவன் - காலம் செய்யும் கோலம்
நிதியின் கருணையால் வந்து - லலிதாவை ஜெயம் போக்கும் !! :-)

புதிய தென்றல் - புரியா புதிர் - இந்நாளும் இனிய நாளோ
பல கோடி - புது வாக்கர் - மதியால் விதியை வெல்வர்?
மன்னர்கள் வாழும் மகேசன் நாட்டை நிலை நிறுத்துவர்
பல கோடி - முது வாக்கர் - விதியை மோ()தியால் வெல்வர் ?

நல்ல காலம் பிறக்குது - நல்ல நேரம் மிதக்குது
நல ஆட்சி பெருக்குது - நல் கட்சி நிலைக்குது
புத்தாண்டு வாக்கும் வாக்குறுதி அல்ல - பலிக்குது
புத்தாண்டு வாக்கும் தெருக்கூத்து அல்ல - சிறக்குது !!

தமிழர் திருநாள் வந்தது இன்று
தமிழ் நெஞ்சங்கள் வாழ்த்துது வந்து
தாயும் சேயும் வாழ்க வென்று
தாயகம் காப்போம் வளமுடன் நன்று !!

புத்தாண்டின், சிறப்பு மிகு வாக்கின், ப்ரதிபலிப்பு - நல் நெஞ்சங்கள் கூறும் நிஜங்கள் ..
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி) - ஏப்ரல்14 2014 - சித்திரை 1, 2014
பி.கு. இம்முறையும், இந்த சொந்த சரக்கை,  பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்..

Friday, January 17, 2014

பொங்கல் பரிசு - பரிசின் சிகரம் - நிகரில்லா விழா கோலம் - Jan 2014



பொங்கல் பரிசு - பரிசின் சிகரம் - நிகரில்லா விழா கோலம்


பரிசு ஒன்று தர நினைத்தேன்
சிபாரிசு பல கோரி  விரைந்தேன்
எண்ணிக்கைகள்  பல பல உதயம்
பரிசு வகைகள் பல பல எண்ணம்

அட்டவணை இட்டேன் பல பல
நிறங்கள் பல பல
நீளங்கள் பல பல
அட பாடு படுது இதயம் லப் டப்

நம் உறவோ நட்பின் இலக்கணம்
அதற்கும் உண்டோ அடைக்கும் தாள்
நல உணர்வு நட்பின் அடையாளம்
அதற்கும் உண்டோ நிகர் உதாரணம்!!

கொச்சை படுத்த எண்ணம் இல்லை
பரிசின் சிபாரிசில் மயங்க வில்லை
கொடுமை படுத்த காரணம் இல்லை
பரிசின் சிபாரிசில் சிறுவன் (விழ ) வில்லை

மிக்க சிறந்த பரிசின் சிகரம் இதோ
மாண்பு மிகு வாழ்த்துக்கள் இதோ
மிக்க சிறந்த சிபாரிசின் மகுடம் இதோ
இன்ப மிகு காலங்கள் வாழ்க இதோ

வத்தது  இன்றோ எல்லையில்லா பரிசு
நட்பின் காலத்தில் இதுவன்றோ நிகர்
விழா காலத்தில் மனதை நிரப்பும்
இறை அருள் புத்துணர்ச்சி நிலைக்கும்..

பொங்கல் வாழ்த்துக்கள் சமர்ப்பிக்கும் நண்பன் குடும்பகம்

சாத்விக் - நளினி - கணேசன் (ரவி)

பி.கு:: இது ஒரு சொந்த சரக்கு - forward அல்ல என்பதை தாழ்மையுடன் சமர்பிக்கிறோம்..