visits - with gratitudes

Tuesday, January 17, 2017

பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு - பொங்கலோ பொங்கல்

Image result for pongal images


பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு


பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு 
பேத பாவங்கள் உண்டு - இருப்பினும் நம் நாடு 
பேர பாதைகள் உண்டு -  இருப்பினும் நம் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு!

பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு 
ஜாதி மோதல்கள் உண்டு - இருப்பினும் நம் நாடு 
மோதி ஜாலங்கள் உண்டு - இருப்பினும் நம் நாடு 
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு !

பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு 
மூளைசாலிகள்  உண்டு - ஆம் நம் நாடு 
பலசாலிகள் உண்டு - ஆம் நம் நாடு 
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு !

பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு 
திருவிழாக்கள் பல உண்டு - ஆம் நம் நாடு 
பொங்கலோ பொங்கல் கண்டு - ஆம் நம் நாடு 
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு !!

பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு 
நன்றி பாராட்டுவோம்  - பொங்கலோ பொங்கல் 
 நம்பி ஆடி பாடுவோம் - பொங்கலோ பொங்கல் 
பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு !!!

அன்புடன் வாழ்த்தும் இனிய இதயங்கள் 
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி )
13 Jan 2017

No comments:

Post a Comment

value your views