visits - with gratitudes

Thursday, December 31, 2015

Happy New Year 2016 - The Chennai Spirit (TCS) - 31 Dec 2015



Happy New Year 2016 - The Chennai Spirit (TCS)

In Chennai, I rediscovered myself
In Chennai, I redeemed myself 
In Chennai, I realized myself 
In Chennai,I rested myself 

Salute - the humanity - abundant
Salute - the divinity - absolute
Proud - the devout - astute
Proud - the ardent - avid 

Chennai and beyond - Happy New year
Jai Ho Chennai - Everest of humanity
Chennai and beyond - Happy New year
Jai Ho Chennai - Edifice of humilty...

Loving and Respectful greetings from 
Ganesan - Nalini - Sathvik 
31 Dec 2015 

Additional notes: 
Dedicating this year's expressions to Chennai, moved by the Chennai spirit turning into a monument of movement this Dec 2015. Hats off!! 
P.S : This is an in-house creation and not a forward - thus request double enjoyment please..

Tuesday, November 10, 2015

முகப்பக்கம் (facebook) - என்ன அங்கே (whatsapp) - தீபாவளி உரையாடல் - வாழ்த்துக்கள் - 10 Nov 2015

முகப்பக்கம் (facebook) - என்ன அங்கே (whatsapp) - தீபாவளி உரையாடல் - வாழ்த்துக்கள்

காட்சி 1 - ஒருவரை ஒருவர் - சாடுதல் - வாழ்த்துதல்

ஆஹா ! - லைக் போட்டாச்சா - ஆஹா
வேறு வேலை இல்லைய்யா அண்ணே
ஆஹா ! - லவ் க்கும் லைக் தான்
வெட்டி பயலுக்கும் லைக் தானா - அண்ணே !!

ஓஹோ! - யார் பேசறான் - பாருங்க - இன்னிக்கு
வெறித்தனமாய் smiley போடும் சண்டியன் நீயா
ஓஹோ - குரூப் அட்மின்க்கும் smiley தான்
வெட்டி பசங்களும் இங்கே தான் smiley தான் !! 

காட்சி 2 - ஆடல் பாடல் - அரங்கேறும் தருணம்

அண்ணே அண்ணே - facebook அண்ணே
நம்ம குரூப் நல்ல குரூப்
இப்ப ரொம்ப  நல்ல குரூப் அண்ணே
நமோ (Namo) அந்தாதி பாடு பாடு அண்ணே !!  (Tune Anne Anne Sippai Anne)

ஆஹா - வந்துட்டான்யா - வந்துட்டான்யா - சபாஷ் சரியான போட்டி !!

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
நான் சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நான் சிரித்தால்  தீபாவளி - ஹோய்
நாளும் இங்கே ஏகாதசி - ஹோய் ( நமோ நமோ ..)  (Tune Ange sirippavargal .. Sirikkattum - Rickshawkaaran)

ஓஹோ - பாட்டு பாடும் அண்ணே - இந்தா வாங்கிக்கோ

எங்கே நிம்மதி - எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே facebook அண்ணே இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும் !!              (Tune Enge Nimmadhi - Sivaji..)

காட்சி 3 - பாட்டி வந்தால் - பாட்டும் படும் பாடு

பேரப்பசங்களா - என்ன அங்கே சத்தம் சண்டை
உங்க அப்பா அம்மா வந்துட்டாங்க
ஒழுங்கா போய் படிங்க - படிக்கற மாதிரி நடிங்க
பேரப்பசங்களா - என்ன நான் சொன்னது கேட்டுதா !!

காட்சி 4 -அம்மா hotmail - அப்பா messenger - வருகை - Complete Silence - நிசப்தம் உச்சம்

............................................

காட்சி 5 - facebook - whatsapp -  அம்மா அப்பாவை கட்டி கொள்கின்றனர்

ஓஹோ - ஆஹா - தீபாவளி வாழ்த்துக்கள் - தீபாவளி வாழ்த்துக்கள்
நாங்க ரெண்டு பேரும் ஒன்னு தான்
நீங்க ரெண்டு படாம ஒண்ணா இருங்க - கண்ணுங்களா
ஓஹோ - ஆஹா - ஒண்ணா இருங்க - வெடி வெடிங்க - நல்லா இருங்க!!

நல்லதையே பேசுங்க - எங்களை மாதிரி - share பண்ணுங்க
நல்லதையே நினைங்க  - எங்களை மாதிரி - post  பண்ணுங்க
நாங்க உங்களின் தோழன் - உலகாளும் தொண்டன் ஆமாங்க
நல்ல நாள் பிறந்தது - நம்பிக்கையா இருங்க - comment பண்ணுங்க !!

=====================================================
தீபாவளி நல்வாழ்த்துக்கள்- நல் நெஞ்சங்கள்
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி)
சிங்கை சிங்கங்களின் சிங்கார சிறப்பு (சிரிப்பு) 
=========================================================

Monday, April 13, 2015

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - இதயத்தில் தோன்றும் பல் துளிகள் - கிறுக்கல் 2






தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - இதயத்தில் தோன்றும் பல் துளிகள் - கிறுக்கல் 2

புதியதோர் உலகம் செய்வோம் - பாரதி கண்ட கனவு !
இருப்பதோர் உலகம் எண்ணியே - கண்டான் அவன் உணர்வு !!

சார்ந்து வாழும் உலகம் - சேர்ந்து வாழுவது எப்பொழுது  ?
பார்த்து வாழும் உலகம் - பாராது வாழுவது எப்பொழுது  ??

மின்சாரம் இல்லா உலகில் - முக்கிய சாதனம் இல்லை அன்று !
பல சாகசம் நடத்தும் உலகில் - முக்கிய சாரம் இல்லை(யோ) இன்று !!

பாரதி பாடினான் பாட்டு  - கூடினோம் நாம் அன்று - கேட்டதே !
மனம் படும் பாடு - மனிதன் பாடும் பாட்டு - கேட்கிறதா இன்று ?

கூடி வாழ்ந்தோம் - கோடி நன்மை - கிட்டுது என நம்பி - அன்று !
கோடி வந்தாலும் - கூடி வாழ்வா - கேட்கிறோம் நம்பாது - இன்று ?

மன குழப்பம் நீங்கியது - மனதில் சாந்தி நிலவுது - நாளை   !!
மனதில் நிலை நிறுத்தி - நம்பிக்கை சார்ந்து சேர்த்து - இன்று !!

திடீர் உதயம் - ஏன் என்றேன் - இளம் தலைமுறை மனதில் நினைத்து
ஐயம் அல்ல - ஜெயமே என்றேன் - தலைமுறை மானத்தை நிலை நாட்டுது !!

இன்றே புதிய வருடம் - இன்றே புதிய உணர்வு - நம் நாளை நம் கையில்
இறைவனை வேண்டுவேன் - நீங்களும் நாங்களும் - மனதில் உறுதி வேண்டி !!


புத்தாண்டு வாழ்த்துக்கள் - இனியொரு முறையில் - நம்பி வாழும்
சாத்விக் - நளினி - கணேசன் (ரவி)

மனதில் உறுதி தரும் நாகூர் ஹனிபாவின் வரிகளை கேட்டபின் உதயம்
இறைவனிடம் கை ஏந்துங்கள் - அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன்  கேட்டு பாருங்கள் - அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை