visits - with gratitudes

Wednesday, October 18, 2017

தீபாவளி வாழ்த்துக்கள் - நாடும் வீடும் ஒன்று கூடி




தீபாவளி வாழ்த்துக்கள் - நாடும் வீடும் ஒன்று கூடி
உங்கள் தமிழன் - மன கோட்டையிலுருந்து

தீபாவளி வாழ்த்துக்கள் பரிமாறுவோம் - உள்ளம் குளிர
இறை அருள் பாராட்டுவோம் - மனம் உணர
தீபாவளி வாழ்த்துக்கள் பரிமாறுவோம் - உள்ளம் குளிர
ஈன்றவளை பாராட்டுவோம் - மனம் உணர !!

தாய் நாட்டின் நலம் போற்றுவோம் - என்றும் என்றென்றும்
கடந்த பாதையில் கண்டெடுத்த முத்தே மூலதனம் - ஆம் பாடம்
தாய் நாட்டின் நலம் போற்றுவோம் - என்றும் என்றென்றும்
வரும் பாதையில் முத்தே கிட்டும் நம்பிக்கை - ஆம் படம் !!

தாய் தந்தையின் ஆசிகள் - நம்முடன் பயணம் - என்றென்றும்
உந்தன் சுவாசத்தில் என்னை உணர்ந்தேன்
தாய் நாட்டின் ஆசைகள் - நம்முள் மலர்ந்ததே - அன்றே 
உந்தன்  சுவாசத்தில் அதை  உணர்வேன் - என்றென்றும்

தாய் நாடோ வீடோ என்றும் நிலை நிறுத்துவோம் - உறவே உருவம்
வீட்டில் பிறக்கும் உறவும் நாட்டை இணைக்கும் உறவும் - ஒன்றே என்பேன்
தன்னலத்தில் பிறக்கும் இன்பம் நாட்டை பிரிக்கும் துன்பம் - ஒன்றே என்பேன்
நாட்டின் பலனே வீட்டில் காண்போம் - இன்பம் என்றுமே - உறவே உருவம்

தீபாவளி வருகுது - தாய் குரல் கேட்குது - ஆம் நாடும் வீடும் ஒன்று கூடி
வெடியின் சத்தத்தை போக்குவோம் - ஒளியின் சுகத்தை கொண்டு
சத்தத்தின் வெடியை போக்குவோம் - சுகமான ஒற்றுமை கொண்டு
தீபாவளி வருகுது - தாய் குரல் கேட்குது - கூடுவோம்  பாட்டு பாடி
 …….தமிழ் பாட்டு பாடி.......

நாடு-வீடு நலம் போற்றும் சிறுவன் - உங்கள் தமிழன் –
தீப ஒளி ஏந்தி

கணேசன் (ரவி) - நளினி - சாத்வக்
தாய் தந்தையின் ஆசிகள் என்றும் நம்முடன் பயணம்

17 அக்டோபர் 2017



No comments:

Post a Comment

value your views