நல்ல காலம் பிறக்குது - apr 2009
நல்ல காலம் பிறக்குது
விரோதி பிறந்து வளர்ந்தது
நல்ல காலம் பிறக்குது
விரைந்து திறந்து வாழ்த்துது!!
சென்ற காலம் செம்மையான காலம்
செவிக்கு உணவு கொடுத்தோம்
பணிக்கு உணர்வு ஊட்டினோம்
சென்ற காலம் செம்மையான காலம்!!
சென்ற காலம் செம்மையான காலம்
சாலையில் மரங்கள் நட்டோம்
மரங்களின் நிழல்களை நாடினோம்
சென்ற காலம் செம்மையான காலம்!!
நிகழ் காலம் ஆனந்தம் ஆனந்தம்
நீண்ட பயணம் தரும் ஆய்வு அறிவு
நீங்கா எண்ணம் தரும் ஆராய்ந்த பணிவு
நிகழ் காலம் ஆனந்தம் ஆனந்தம்!!
நிகழ் காலம் ஆனந்தம் ஆனந்தம்
சர்வதாரியில் சாதித்த சங்கதிகள்
சலங்கை ஒலியின் சளைக்கா ஸ்வரங்கள்
நிகழ் காலம் ஆனந்தம் ஆனந்தம்!!
வரும் காலம் வாழும் காலம்
விரோதங்களை விட்டு ஓடும் கோலம்
விசிறிகள் வந்து அடையும் காலம்
வருடம் தரும் நிகரில்லா சிகரம்!!
வேண்டும் வேண்டும் உந்தன் வாழ்த்து
வணங்குவோம் உந்தன் பாதத்தில் பணிந்து
வேண்டும் வேண்டும் மனதில் அமைதி
வணங்குவோம் உன்னை மறவா உறுதி!!
நேற்று இன்று நாளை எப்பொழுதும்
என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உனக்கே
எல்லோரும் எங்கேயும் அமைதியுடன் வாழுங்கள்
என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உனக்கே!!
விரோதி வருட புத்தாண்டில் வாழ்த்துகிறோம் - புது உணர்வை போற்றுகிறோம்
சாத்விக் - நளினி - கணேசன்
No comments:
Post a Comment
value your views